விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்ட கிரிக்கெட் உள் விளையாட்டு அரங்கத்தை தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், கிரிக்கெட் விளையாடி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அரங்கில் செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.