ராமநாதபுரம் அருகே உள்ள உத்தரகோசமங்கை கோயிலில், 5 அடி உயர பச்சை மரகத நடராஜர் சிலையை மர்ம நபர்கள் திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிகாலை கோவிலுக்குள் புகுந்த மர்மநபர்களை, காவலர் செல்லமுத்து தடுத்து நிறுத்தி உள்ளார். அவரை அரிவாளால் வெட்டிய மர்மநபர்கள், அலாரம் ஒலித்ததால் அங்கிருந்து தப்பியோடி உள்ளனர். இதைடுத்து மர்மநபர்கள் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.