கொதிக்கும் டீயை மூஞ்சியில் ஊற்றிய மர்ம நபர்கள் - வெளியான அதிர்ச்சி சிசிடிவி..

x

கொதிக்கும் டீயை மூஞ்சியில் ஊற்றிய மர்ம நபர்கள் - வெளியான அதிர்ச்சி சிசிடிவி.. புதுக்கோட்டையில் பரபரப்பு சம்பவம்

புதுக்கோட்டை அருகே டீக்கடைக்கு வந்த மர்ம நபர்கள் பணம் கேட்டு தராததால், டீக்கடைகாரர் மீது கொதிக்கும் டீயை ஊற்றும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் பள்ளத்துப்பட்டி அருகே டீக்கடை வைத்து வியாபாரம் செய்பவர் மாரிமுத்து. இவர் கடைக்கு வந்த 4 மர்ம நபர்கள் பணம் கேட்டு மிரட்டினர். பணம் தராததால் கொதிக்கும் டீயை அவர் மீது ஊற்றியுள்ளனர். போலீசில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மாரிமுத்து மகன் இதன் சிசிடிவி காட்சியை சமூக வலைதளத்தில் வெளியிட்டு காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்