நோட்டமிட்டு பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் - சிறிது நேரத்தில் அலறி கத்திய பெண்.. அதிர்ச்சி
கால் சென்டரில் பணியாற்றும் பெண் ஊழியரிடம் செயின் பறிப்பு
சென்னை பல்லாவரம் அருகே பைக்கில் சென்ற, கால் சென்டரில் பணியாற்றும் பெண் ஊழியரின் இரண்டரை பவுன் செயினை மர்மநபர்கள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்லாவரம், MGR தெருவை சேர்ந்த கலைவாணி என்பவர், வழக்கம்போல முடிச்சூரில் உள்ள தனியார் கால் சென்டரில் இருந்து பணி முடிந்து பைக்கில் வீடு திரும்பினார். அப்போது, அவரின் வீட்டின் அருகே பைக்கில் பின் தொடர்ந்து வந்த மர்மநபர், திடீரென அவரது செயினை பறித்துவிட்டு தப்பினார்.
Next Story
