மர்ம விலங்கு கடித்து கால்நடைகள் பலி - சிறுத்தை கால்தடமா? என ஆய்வு
விழுப்புரம் மாவட்டம் ரெட்டணை பகுதியில் மர்ம விலங்கு கடித்து கால்நடைகள் பலியான சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சென்ற வனத்துறையினர் சம்பவ இடத்தில் சிறுத்தை கால் தடம் இருந்ததை கண்டு பிடித்துள்ளனர். இதையடுத்து கூண்டு அமைத்து ட்ரோன் உதவியுடன் வனத்துறையினர் சிறுத்தையை தேடி வரும் நிலையில் இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story