"குடிகாரனுக்கு வாக்கப்பட்ட என் கதை.." | பாடலை கேட்டு தேம்பி தேம்பி அழுத மாணவிகள்

x

போதைப்பொருள் விழிப்புணர்வு பாடலைக் கேட்டு தேம்பி அழுத மாணவிகள்

சேலத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழச்சியில் பாடப்பட்ட, விழிப்புணர்வு பாடலைக் கேட்டு பள்ளி மாணவிகள் தேம்பி அழுதனர்.

சேலம் கொண்டலாம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு, போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது விழிப்புணர்வு பேச்சாளர் பாண்டியராஜன் என்பவர், “குடிகாரனின் மனைவி நிலை“ என்ற தலைப்பில் நாட்டுப்புறப் பாடல் ஒன்றை பாடினார். மேலும் “குடிகாரனுக்கு வாக்கப்பட்ட என் கதையை கேளுங்க“ எனத் தொடங்கும் பாடலை அவர் பாட பாட, மாணவிகள் கண்களை மூடிக்கொண்டு தேம்பி அழுத காட்சிகள் காண்போர் மனதை கலங்க வைக்கிறது. ஒவ்வொரு மாணவ, மாணவிகளின் வீட்டில் உள்ள நிலையை சித்தரிக்கும் விதமாக, இந்தப் பாடல் அமைந்ததே மாணவிகளின் கண்ணீருக்கு காரணமாக இருந்திருக்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்