"என் குடும்பமே உன்னால் தான் பிரிந்தது.." - திடீரென கல்வீசி தாக்குதல் நடத்தியவரால் பரபரப்பு
என் குடும்பமே உன்னால் தான் பிரிந்தது.." - திடீரென கல்வீசி தாக்குதல் நடத்தியவரால் பரபரப்பு
ஈரோடு மாவட்டம் பவானி அருகே, பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கல்வீசி தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
சேர்வராயன் பாளையம் பகுதியை சேர்ந்த குருபிரசாத் என்பவர் கேபிள் தொழில் செய்து வருகிறார். இவரிடம், அதே பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மனைவி ரேஷ்மா பணிபுரிந்து வந்துள்ளார். ரேஷ்மாவுக்கும் குருபிரசாத்திற்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையால் ரேஷ்மாவை குருபிரசாத், வேலையை விட்டு நிறுத்திய கூறப்படுகிறது. இதனால் ரேஷ்மாவிற்கும் அவரது கணவர் மாணிக்கத்திற்கும் பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.
இந்நிலையில் பவானி ஆற்றங்கரை ஓரம்
குருபிரசாத் சென்றபோது, அங்கு வந்த மாணிக்கம், தனது குடும்பம் பிரிந்ததற்கு குருபிரசாத் தான் காரணம் எனக்கூறி தகராறில் ஈடுபட்டு கல்லை எடுத்து வீசியதாக கூறப்படுகிறது. இதில் குருபிரசாத் மயங்கி கீழே விழுந்த நிலையில், அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
