டாப் 50 டெக் லீடர்ஸ் பட்டியலில் Muthood Mini குழும அதிகாரி தேர்வு
டாப் 50 டெக் லீடர்ஸ் பட்டியலில் முத்தூட்டு மினி குழும அதிகாரி தேர்வு
தங்க நகைக் கடன் வழங்குவதில் நம்பிக்கை பெற்ற நிறுவனங்களில் ஒன்றாக முத்தூட்டு மினி பைனான்சியர்ஸ் (Muthoottu Mini Financiers) நிறுவனம் விளங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் தொழில்நுட்ப அதிகாரியான சி.வினோத் குமார், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் துறையில், முதல் 50 தொழில்நுட்ப அதிகாரிகளின் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.முத்தூட்டு மினி பைனான்சியர்ஸ் நிறுவனம், டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு மாறியதில் குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பு செலுத்தியதற்காக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற விழாவில், சி.வினோத் குமார் கௌரவிக்கப்பட்டார். அப்போது, தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பண பரிமாற்ற சேவையை எளிமைப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளுக்காக தாம் அங்கீகரிக்கப்பட்டதாக சி.வினோத் குமார் பெருமையுடன் தெரிவித்தார்.