Musuri | TNPSC Exam | "ஒரே தேர்வில் சிலருக்கு அனுமதி, மற்றவர்களுக்கு மறுப்பு.." -முசிறியில் பரபரப்பு
#Musiri #TNPSCExam #Exam #ThanthiTV Musuri | TNPSC Exam | "ஒரே தேர்வில் சிலருக்கு அனுமதி, மற்றவர்களுக்கு மறுப்பு.." - முசிறியில் பரபரப்பு சம்பவம் திருச்சி மாவட்டம் முசிறியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வில், தேர்வறைக்குத் தேர்வர்களை அனுமதிப்பதில் குளறுபடி ஏற்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. முகவரி குழப்பத்தால் தா.பேட்டைக்குச் சென்ற பெண் தேர்வர், முசிறிக்குத் திரும்பியபோது அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அரசு ஜீப் மூலம் அழைத்து வரப்பட்ட அவர், காலை 9.15 மணிக்கு தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், காலை 8.50 மணிக்கே வந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. மேலும் ஐந்து தேர்வர்களும் பள்ளி முன்பு காத்திருந்தனர். ஒரே தேர்வில் சிலருக்கு அனுமதி, மற்றவர்களுக்கு மறுப்பு என எழுந்துள்ள புகாரால் தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தேர்வு நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
