Muslims| Labbay | இஸ்லாம் மதம் மாறியவருக்கு `லெப்பை’ சர்டிபிகேட் வழங்க முடியாது -நீதிபதிகள் தீர்ப்பு
இஸ்லாமுக்கு மாறியவருக்கு லெப்பாய் சான்றிதழ் வழங்க முடியாது என தீர்ப்பு இஸ்லாமுக்கு மதம் மாறியவருக்கு ‘முஸ்லிம் லெப்பாய் சமூகச் சான்றிதழ் வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பளித்துள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் சமீர் அகமது என மாறி, லெப்பாய் சான்றிதழ் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்... இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் பி.பி. பாலாஜி ஆகியோர் விசாரித்தனர். ஒருவர் இஸ்லாமிற்கு மதம் மாறியவுடன் அவர் முஸ்லிமாக மட்டுமே கருதப்படுவார் என்றும், ஆனால், லெப்பாய், ராவுத்தர் போன்ற குறிப்பிட்ட பிரிவை பெற முடியாது என்றும் நீதிபதிகள் கூறினர். மதம் மாறியவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சான்றிதழ் வழங்கலாம் என்ற தமிழக அரசின் 2024-ஆம் ஆண்டு அரசாணை நீதிமன்ற உத்தரவுகளுக்கு முரணானது. மேலும், லெப்பாய், ராவுத்தர் போன்ற சமூக அடையாளங்கள் பிறப்பின் அடிப்படையில் உருவானவை என்றும், அதை நிர்வாக உத்தரவுகள் மூலம் மாற்ற முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மதம் மாறியவர் ஒரு முஸ்லிம் மட்டுமே எனக் கூறி, குறிப்பிட்ட சமூகச் சான்றிதழ் கோரிய மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்
