இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் 50வது பிறந்தநாள் விழா

x

தமிழ் சினிமாவில் இசையமைபாளராக அறிமுகமாகி சிறந்த நடிகராக வலம் வரும் விஜய் ஆண்டனி தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்..

2005ம் ஆண்டு 'சுக்ரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி தன் தனித்துவமான இசையால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

2012ம் ஆண்டு 'நான்' திரைபடத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர் சலீம், பிச்சைக்காரன் என அடுத்தடுத்த ப்ளாக் பஸ்டர் திரைப்படங்களால், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கிறார்.

இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவின் பன்முக கலைஞரான விஜய் ஆண்டனிக்கு ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்