Murugan Temple Kanyakumari | பாரம்பரிய முறைப்படி முருகனுக்கு காவடி எடுத்த அரசு அதிகாரிகள்
பாரம்பரிய முறைப்படி காவடி எடுத்த அரசு அதிகாரிகள். கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோவில் வேளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்காக பாரம்பரிய முறைப்படி அரசு அதிகாரிகள் காவடி எடுத்தனர். தக்கலை காவல்நிலையம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் தலா 2 புஷ்பக்காவடிகள், தலா ஒரு பால்குடம் எடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பத்மநாபபுரம் நீதிபதிகள், தக்கலை டி.எஸ்.பி., காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் இதே போன்று அதிகாரிகள் சார்பில் காவடி எடுப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
