பெங்களூருவிலும் கைவரிசையில் ஈடுபட்ட முருகன்-தொடர்ந்து விசாரிக்க உள்ளதாக பெங்களூரு போலீஸ் தகவல்

பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் பெங்களூருவிலும் கைவரிசையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது
பெங்களூருவிலும் கைவரிசையில் ஈடுபட்ட முருகன்-தொடர்ந்து விசாரிக்க உள்ளதாக பெங்களூரு போலீஸ் தகவல்
Published on

பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் பெங்களூருவிலும் கைவரிசையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் கடந்த 11ஆம் தேதி பெங்களூருவில் சரணடைந்த முருகனிடம் தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளதாக பெங்களூரு போலீசார் தெரிவித்துள்ளனர். லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த விரும்பினால் தமிழக போலீசார் நீதிமன்றத்தை நாட வேண்டும் தெரிவித்துள்ளனர். முன்னதாக லலிதா ஜூவல்லரி கடையில் கொள்ளையடித்த நகையை தமது வீட்டின் அருகே புதைத்து வைத்துள்ளதாக முருகன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பெங்களூரு போலீசார் அந்த நகைகளை கைப்பற்றி, அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். நகைக்கான ஆதாரங்களை லலிதா ஜூவல்லரி நிர்வாகம் சமர்பித்தால், அதனை ஒப்படைப்போம் என்றும் பெங்களூரு போலீசார் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com