மது அருந்த பணம் தராததால் மளிகை கடைக்காரர்

x

மது அருந்த பணம் தராததால் மளிகை கடைக்காரர் எரித்துக் கொலை

நாகர்கோவில் அருகே மளிகை கடைக்காரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி அளித்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் நாகர்கோவில் வைத்தியநாதபுரம் பகுதியைச் சேர்ந்த வேலு என்பவரின் உடல் கடந்த 8ஆம் தேதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், சுதன் என்பவரால் வேலு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து சுதனை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், மது அருந்துவதற்காக வேலுவிடம் சுதன் பணம் கேட்டதற்கு, அவர் தர மறுத்ததால் கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்ததாக தெரிவித்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்