சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் அழைத்த மர்ம நபர் ஒருவர், தனது பெயரை தெரிவித்ததோடு, முதலமைச்சரை கொடைக்கானலில் வைத்து கொலை செய்ய உள்ளதாக கூறி விட்டு, இணைப்பை துண்டித்துள்ளார். உடனே சென்னை சைபர் கிரைம் போலீசார் மிரட்டல் விடுத்த நபர் குறித்த, தொலைபேசி எண் மூலமாக விசாரித்தனர். அப்போது, திண்டுக்கல்லில் இருந்து சந்துரு என்பவர் பேசியது தெரிந்தது. இதையடுத்து, திண்டுக்கல் போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.