Cuddalore Mu*der Crime | தீப்பெட்டிக்காக ரத்தம் தெறிக்க கொலை - கடலூரில் வினோத கொடூரம்
தீப்பெட்டிக்காக ரத்தம் தெறிக்க கொலை
Cuddalore Mu*der Crime | தீப்பெட்டிக்காக ரத்தம் தெறிக்க கொலை - கடலூரில் வினோத கொடூரம் #cuddalore #murdercases #policearrest கடலூர் அருகே தீப்பெட்டிக்காக மீனவர் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் முதுநகர் அடுத்த சோனஞ்சாவடியை சேர்ந்த மீனவரான பூமிநாதன், அதே பகுதியில் உள்ள உணவகம் அருகே, மர்ம நபர்களால் கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதுகுறித்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சுதாகர் மற்றும் முகேஷ் ஆகிய இருவரை கைது செய்து விசாரித்தனர். கடலூர் முதுநகர் பகுதிக்கு விசேஷத்திற்கு வந்த இருவரும் மதுபோதையில் பேருந்தில் அலப்பறை செய்ததுடன், சோனஞ்சாவடியில் பூமிநாதனிடம் தீப்பெட்டி கேட்டு தகராறில் ஈடுபட்டு, அவரை தலையில் கல்லால் தாக்கியது தெரியவந்தது.
