கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி

மங்களூருவில் இருவரும் கைது - சிறையில் அடைப்பு
கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி
Published on

கடந்த மாதம் 18-ஆம் தேதி, கொடைக்கானல் மலைச்சாலையில் கொலை செய்யப்பட்ட நிலையில், மங்களூருவைச் சேர்ந்த முகமது சமீர் என்பவரின் உடல் மீட்கப்பட்டது. இது குறித்து தேவதானப்பட்டி தனிப்படை போலீசார், விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில், கொலையான முகமது சமீரின் மனைவி ஃபர்தோஷ் மற்றும் வாடகை கார் ஓட்டுநர் முகமது யாசிப் ஆகியோரை மங்களூருவில், போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சமீருக்கு தூக்க மாத்திரை கொடுத்து கொடைக்கானல் சாலையில் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளனர். இதையடுத்து இருவரையும் பெரியகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com