கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட இளைஞர் - இருதரப்பு மோதலாக மாறிய கொலை சம்பவம்

மயிலாடுதுறை அருகே வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்ட வழக்கில், 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் இரு சமூக மோதலாக மாறியதால் பதற்றத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட இளைஞர் - இருதரப்பு மோதலாக மாறிய கொலை சம்பவம்
Published on
மேலமாப்படுகை கன்னித்தோப்புத்தெருவை சேர்ந்த விஜய் என்பவர், பைக்கில் சென்றபோது சாலையில் நடந்து சென்ற அதே பகுதியை சேர்ந்த மனோகர் என்பவர் மீது உரசியதாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த மனோகர் மற்றும் அவரது சமூகத்தினர் விஜயை தாக்கியுள்ளனர். இதையடுத்து விஜய் சமூகத்தினர் மனோகர் வீட்டிற்கு சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட மோதலில் கத்தியால் குத்தி விஜய் கொல்லப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் இரு சமூக பிரச்னையாக மாறியதால் பதற்றத்தை தணிக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com