விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை - 4 பேரை கைது செய்த போலீசார்

சென்னையில் போதைப் பொருள் விற்பனை நடப்பதை போலீசாரிடம் சொன்னதால் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகியை கொடூரமாக வெட்டிக் கொன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை - 4 பேரை கைது செய்த போலீசார்
Published on

சென்னை தண்டையார்பேட்டை வீரா குட்டி தெருவில் வசித்து வந்த விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகியான கேசவன் நேற்று இரவு கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரை வெட்டிக் கொன்ற 10 பேர் கொண்ட கும்பலை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றது. செல்போன் சிக்னலை வைத்து விசாரணை நடத்தியதில், அந்த கும்பல் எர்ணாவூர் மற்றும் அத்திப்பட்டு பகுதியில் பதுங்கியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கொலையாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். வீராகுட்டி தெருவில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து கேசவன் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், கேசவனை வெட்டிக்கொன்றது தெரியவந்தது. மேலும் தப்பி ஓடிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com