இளம்பெண்ணை கொன்று தற்கொலை நாடகமாடியவர்கள் கைது...

விசாரணையில் கணவர், மாமியார் கொலை செய்தது அம்பலம்.
இளம்பெண்ணை கொன்று தற்கொலை நாடகமாடியவர்கள் கைது...
Published on

திருச்சி மாவட்டம் குளத்தூராம்பட்டியைச் சேர்ந்த விக்டோரியா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாய் மேரிக்கு கணவர் மோசஸ் ஆரோக்கியராஜ் தகவல் கொடுத்துள்ளார். அங்கு சென்று பார்த்தபோது, மகள் விக்டோரியாவின் கழுத்து இறுக்கி கொலை செய்யப்பட்டது போல தெரியவந்துள்ளது. அவர் அளித்த புகாரின் பேரில், போலீசாரும், ஸ்ரீரங்கம் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தினர். தாய் அருள்மணியுடன் இணைந்து விக்டோரியாவை கொலை செய்ததை போலீசாரிடம் மோசஸ் ஆரோக்கியராஜ் ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com