சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை கொல்ல முயற்சி - சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகள் தேடுதல் வேட்டை

சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை வெட்டிவிட்டு தப்பி சென்ற மூன்று பேரை அயனாவரம் போலீசார் தேடி வருகின்றனர்.
சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை கொல்ல முயற்சி - சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகள் தேடுதல் வேட்டை
Published on
சென்னை அயனாவரம் பாளையம்பிள்ளை தெருவை சேர்ந்தவர் சரவணன் என்கிற சதீஷ். இவர் அயனாவரம் கோபிகிருஷ்ணா திரையரங்கம் எதிரே ஆதவன் என்கிற சூப்பர் மார்க்கெட் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடைக்கு வெளியே சரக்கு வாகனத்தில் பொருட்களை இறக்கி கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத மூன்று இளைஞர்கள் அரிவாளால் சரவணனை வெட்டியுள்ளனர். இதில் நிலைதடுமாறிய சரவணன் சுதாரித்துக் கொண்டு உடனடியாக அவர்களை எதிர்த்து தாக்க முயற்சி செய்தார். கடையில் வேலை பார்க்கும் ஆட்களும் அந்த இளைஞர்களை மடக்கி பிடிக்க முயற்சி செய்த நிலையில், மூவரும் கத்தியை காண்பித்து தப்பித்துச் சென்றனர். காயமடைந்த சரவணன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com