Auroville Issue| Viral Video| மாவுக்கட்டுக்கு பயந்து கொலைகாரர்கள் பகீர் வீடியோ
``சரண்டர் ஆகுறோம்.. இப்போ கை காலுலாம் நல்லா தான் இருக்கு’’ - மாவுக்கட்டுக்கு பயந்து கொலைகாரர்கள் பகீர் வீடியோ
#aurovilleissue #viralvideo
ஆரோவில் அருகே கொலை வழக்கில் சரணடைய சென்றவர்கள் தங்களுக்கு கை, கால்கள் நன்றாக இருப்பதாக வீடியோ வெளியிட்டுவிட்டு சரணடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி ஜீவானந்தபுரத்தை சேர்ந்த ராஜேந்திரகுமார், ஆரோவில் அருகே தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரைச் சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்தப் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என போலீசாரால் தேடப்பட்டு வந்த கிருஷ்ணகுமார், ஜந்து விக்கி, சுரேஷ், மணி, ஹரி கந்தா மற்றும் ஷேக் ஆகியோர் போலீசில் சரணடைந்தனர். இதற்கிடையே, சரணடைவதற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட நபர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், தாங்கள் சரணடைய இருப்பதாகவும் தங்களுக்கு கை,கால்கள் நன்றாக இருப்பதாகவும் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு போலீசாரே முழுப் பொறுப்பு எனவும் வீடியோவில் தெரிவித்துள்ளனர்.
