`ரூல் கர்வ்’-ஐ தாண்டி நிரம்பிய முல்லை பெரியாறு அணை.. கேரளாவை நோக்கி பாயும் உபரிநீர்
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் மொத்த நீர்மட்டமான 142 அடியில், தற்போது நீர்மட்டமானது 136.15 ஆக உயர்ந்துள்ளது. ரூல் கரு முறைப்படி இச்சமயத்தில் 136 அடிக்கு மேல் நீர் தேக்க முடியாது என்பதால், கேரளா பகுதியில் அமைந்துள்ள 13 சட்டர்கள் வழியாக 250 கன அடி நீர் உபரி நீராக திறந்து விடப்பட்டுள்ளது. கேரளா வழியாக உபரி நீர் திறக்கப்படும் போது தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் கேரள நீர்வளத்துறை அதிகாரிகள் இருந்தனர்.
Next Story
