முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது - குல்சன் ராஜ்

முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளதாக ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு மூவர் குழு தலைவர் குல்சன்ராஜ் தெரிவித்தார்.
முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது - குல்சன் ராஜ்
Published on

கேரளாவில் தென் மேற்கு பருவமழை நாளை மறுநாள் துவங்க உள்ள நிலையில் மூவர் குழுவினர் முல்லை பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்டனர். இதன் பின்பு, குமுளியில் உள்ள கண்காணிப்பு அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மூவர் குழு தலைவர் குல்சன் ராஜ், அணையின் கசிவு நீர் இயல்பான நிலையிலேயே உள்ளதாகவும், 13 மதகுப்பகுதிகளும் நல்ல நிலையிலே உள்ளதாகவும் தெரிவித்தார். பேபி அணையை பலப்படுத்துவது குறித்து இருமாநில அரசுகளும் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com