MR Vijayabaskar | மாஜி அமைச்சர் MR விஜயபாஸ்கருக்கு ஷாக் கொடுத்த VAO
மாஜி அமைச்சர் MR விஜயபாஸ்கருக்கு ஷாக் கொடுத்த VAO
முன்னாள் அமைச்சர், அதிமுக பிரமுகர் மீது வழக்கு கரூரில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக பிரமுகர் தனபால் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆண்டாங்கோவில் பகுதியில் அரசு அனுமதியின்றி ஆற்று மணல் கொட்டி வைக்கப்பட்டதாக விஏஓ அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 100 யூனிட்டுக்கும் மேல் மணல் இருந்ததாகவும், அதனை பறிமுதல் செய்ய அதிகாரிகள் சென்ற நிலையில், அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மணல் பறிமுதல் செய்யப்பட்டது.
