சாலை விதி மீறல்களுக்கான அபராத தொகையை குறைக்க வாய்ப்பில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

சாலை விதி மீறல்களுக்கான அபராத தொகையை குறைக்க வாய்ப்பில்லை என போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சாலை விதி மீறல்களுக்கான அபராத தொகையை குறைக்க வாய்ப்பில்லை என போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்து துறை அதிகாரிகள் எடுத்த முயற்சியால் ஓராண்டில் தமிழகத்தில் சாலை விபத்துகள் 24 சதவீதம் குறைந்துள்ளது என்றார். அதிகமான அபராதம் விதிக்கும் பட்சத்தில் தான் சாலை விபத்துகள் குறையும் என்றும் அவர் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com