பள்ளி மாணவர்களுக்கு இலவச உபகரணங்களை முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் வழங்கி வருவதாக திமுக கூட்டணி எம்.பி. பாராட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரத்தில் அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய கொங்குநாடு மக்கள் கட்சியை சேர்ந்த எம்.பி. சின்ராஜ் இவ்வாறு கூறினார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் நாமக்கல் தொகுதியில் சின்ராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.