

ஊட்டிக்கு இயக்கப்படும் மலைரயில், மண்சரிவால் வரும் 29ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 15ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக மலைரயில் செல்லும் பாதையில், மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தது. இதனால் கடந்த 16, 17 மற்றும் 18ஆம் தேதிகளில் மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதன் சீரமைப்பு பணிகள் நிறைவடையும் நிலையில் மீண்டும் பெய்த மழையால், சுமார் 23 இடங்களில் மீண்டும் மண் சரிவுகள் ஏற்பட்டன. இதனால் மலை ரயில் சேவை 24ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது. சீரமைப்பு பணிகள் தாமதமாகி வரும் நிலையில், தற்போது வரும் 29ஆம் தேதி வரை மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.