"மவுலிவாக்கம் கட்டட விபத்திலிருந்து பாடம் கற்றதாக தெரியவில்லை" - உயர்நீதிமன்றம் வருத்தம்

மவுலிவாக்கம் கட்டட விபத்து சம்பவத்தில் இருந்து அதிகாரிகள் பாடம் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது.
"மவுலிவாக்கம் கட்டட விபத்திலிருந்து பாடம் கற்றதாக தெரியவில்லை" - உயர்நீதிமன்றம் வருத்தம்
Published on

காஞ்சிபுரம் மாவட்டம், அனகாபுத்தூர் மூகாம்பிகை நகரில் வசித்து வருபவர்களை அப்புறப்படுத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போது சென்னை சைதாப்பேட்டை, மறைமலை அடிகளார் பாலத்திற்கு அருகே , தென்பகுதியில் அடையாறு ஆற்றை ஆக்கிரமித்து மிகப்பெரிய அடுக்குமாடி கட்டடம் கட்டப்படுவதாக நீதிபதிகள் கிருபாகரன், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி, அடையாறு ஆற்றங்கரையை ஆக்கிரமித்து கட்டப்படும் 11 மாடி கட்டடத்துக்கு அனுமதி வழங்கியது, ஆய்வு மேற்கொண்டது தொடர்பான ஆவணங்களுடன் சி.எம்.டி.ஏ, பொதுப்பணி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நேற்று ஆஜராகினர்.

அப்போது மவுலிவாக்கம் கட்டட விபத்து சம்பவத்தில் இருந்து அதிகாரிகள் பாடம் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை என நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர்.

அந்த கட்டடத்திற்கு தடையில்லா சான்று வழங்கிய அதிகாரிகள் ஆஜராக உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com