கள்ளகாதலுக்காக பெத்த பிள்ளையை கொன்ற அம்மா.. துடிதுடித்து இறந்த சோகம்.. 4 பேர் மீது அதிரடி
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே தாயின் தகாத உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொலை செய்துவிட்டு, கட்டிலில் இருந்து விழுந்ததாக நாடகமாடியை தாயையும் , அவரது காதலனையும் கைது செய்த போலீஸார், காதலனின் நண்பரை தேடிவருகிறார்கள். திசையன்விளை அருகே மகாதேவன் குளத்தை சேர்ந்த பிருந்தாவின் கணவர் வெளியூரில் இருக்கும் நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஒருவரோடு தகாத உறவில் இருந்திருக்கிறார். சம்பவத்தன்று பிருந்தா காதலனோடு தனிமையில் இருந்தபோது, குழந்தை அழுததால்
காதலனின் நண்பனோடு அனுப்பி வைத்திருக்கிறார். மறுநாள் காலையில்
அந்த நபர் குழந்தையை இறந்த நிலையில் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். தகாத உறவு வெளியே தெரியாமல் இருப்பதற்காக
பிருந்தாவும், குழந்தை கட்டிலில் இருந்து விழுந்து இறந்தாக நாடகமாடி இருக்கிறார். தாய் பிருந்தா மற்றும் அவரது காதலன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
