இறந்த குட்டியைத் தூக்கி சுற்றிய தாய் குரங்கின் பாசம்

x

கொடைக்கானல் ஏரி சாலை பகுதியில் இறந்துபோன தனது குட்டியின் உடலைத் தூக்கி கொண்டு, அங்கும் இங்கும் சுற்றிய தாய் குரங்கின் பாசம் காண்போரின் மனதை நெகிழ செய்தது. நட்சத்திர ஏரி அருகே முதலில் குரங்கு கையில் எதையோ எடுத்துச் சென்றதாக நினைத்த சுற்றுலா பயணிகள், அது இறந்த குட்டி என்பதைக் கண்டு கவலை அடைந்தனர். குட்டியை விட்டு செல்லாது துயரத்தில் சுற்றிய தாய் குரங்கின் காட்சி பலரது மனதையும் உருக்கி விட்டது. இறந்த குட்டியிலிருந்து நோய் பரவும் அபாயம் இருப்பதால் வனத்துறை அதன் உடலை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்