காதல் திருமணம் செய்த மகனை வெறுத்த தாய்...சொந்த நிலத்தில் நெல் பயிரிடுவதற்கு எதிர்ப்பு...

x

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் பகுதி...

இந்த மண்ணுக்குனு ஒரு வீரமான வரலாறு இருக்கு. அதனாலயோ என்னவோ இங்க பிறந்தவங்ல்லாம் ரொம்பவே ரோஷக்காரங்களா வாழ்ந்திருக்காங்க. அதோட சாட்சி தான் வண்டி முன்னாடி வீராப்பா நின்னுட்டு இருக்குற இந்த முத்துலெட்சுமி.

இந்த அம்மாவோட வீட்டுக்காரரோட பேரு பூபாலன்.. இவங்களுக்கு ரெண்டு பசங்க, ரெண்டு பொண்ணுங்கன்னு மொத்தமா நாலு வாரிசு இருக்காங்க. அதுல கடைக்குட்டி தான் இப்ப சொந்தபந்தமெல்லாம் இருந்தும் அநாதையா நிக்கிற அசோகன்.

பொதுவா வீட்டுல கடைசி பையன் மேல பெத்தவங்க ரொம்ப பாசம் வெச்சிருப்பாங்கன்னு சொல்வாங்க. ஒருவகையில அந்த அளவுக்கதிகமான பாசம் தான் இப்ப வெறுப்ப மாறி பகையா உருவெடுத்து இருக்கு.

காரணம், அசோகனோட காதல் திருமணம்... சில மாசத்துக்கு முன்னாடி அதே பகுதிய சேர்ந்த ஒரு பெண்ண காதலிச்சு பெற்றோர்கள் சம்மத்தோட அசோகன் திருமணமும் செஞ்சி இருக்காரு.

அதுநாள் வரை முத்துலெட்சுமி – பூபாலன் தம்பதியோட மகன்ன மட்டுமே அறியப்பட்ட அசோகன்ன அவர் வேறுறொரு பெண்ணோட கழுத்துல தாலி கட்டினதும் தனி குடும்பமா அடையாளப்படுத்தி இருக்கு.

இதைதொடர்ந்து புகுந்த வீட்டுக்கு பல கனவுகளோட வந்த மருமகளுக்கும், முத்துலெட்சுமிக்கும் சுத்தமா செட் ஆகல, தனிக்குடித்தனம் தான் ஓரேவழினு மனைவியோட குடும்பம் பிடிவாதமா இருக்கவும் வேறு வழியில்லாம அசோகனும் ஆற்காடு மேட்டு தெருவுல தனி வீடேடுத்து போயிருக்காரு.

கொஞ்சநாள்ல எல்லாம் சரியாகிடும்னு நினைச்சிட்டு இருந்தப்பதான் அடுத்த பிரச்சனை பூதாகரமா வெடிச்சிருக்கு. தனிக்குடித்தனம் போன மகன் கிட்ட அண்ணம் தண்ணீ புழங்கக்கூடாது, அவர் இருக்குற திசையவே திரும்பி பார்க்கக்கூடாதுனு முத்துலெட்சுமி மற்ற குடும்பத்தினருக்கும் கட்டுப்பாடு போட்டு இருக்காங்க.

அதுமட்டுமில்லாம, விவசாயம் மட்டுமே தெரிஞ்ச அசோகன்ன இனி நிலத்துல கால் வைக்கக்கூடாதுனும் கண்டிஷன் போட்டு இருக்காங்க.

இது தொடர்பா ஊர்க்காரங்க பலமுறை பஞ்சாயத்து பேசியும், முத்துலெட்சுமி கொஞ்சம் கூட அவரோட முடிவ மாற்றிக்கிறதா தெரியல, இதைதொடர்ந்து அசோகன் வேறு வழியே இல்லாம வக்கீல் மூலமா காவல்நிலையத்துக்கு போயிருக்காரு.

அசோகனோட தந்தை பூபாலன் பேர்ல அஞ்சு ஏக்கரும், அவரோட தாய் முத்துலெட்சுமி பேர்ல அஞ்சு ஏக்கரும் இருக்கிறது தெரியவந்திருக்கு. அப்பா பேர்ல உள்ள சொத்துல ஏற்கனவே அண்ணன் விவசாயம் செய்றதால, அம்மா பேர்ல உள்ள சொத்துல நெல் பயிறடனும்னு விரும்பி இருக்காரு அசோகன்.

காவல்துறை முன்பு நடந்த பஞ்சாயத்துல முத்துலெட்சுமிக்கு அசோகன் நிலத்த உழுவுற வருமானத்துல ஒரு பங்கு கொடுக்கனும்னு டீல் பேசி இருக்காங்க. இதைதொடர்ந்து புதர்மண்டி கிடந்த அஞ்சு ஏக்கர் நிலத்தையும் லட்சகணக்குல பணத்த இறச்சி தொழிலாளர்கள் வெச்சி சுத்தம் பண்ணி இருக்காரு அசோகன்.

சம்பவம் நடந்த அன்னைக்கு ட்ராக்டர் மூலமா சேடை ஓட்டிட்டு நெல் பயிரிடலாம்னு இருந்தப்பதான் முத்துலெட்சுமி மறுபடியும் மகன்ன விவசாயம் செய்யவிடாம தற்கொலை மிரட்டல் விடுத்திருக்காங்க.

அசோகன் ஏற்கனவே பல பேர்கிட்ட கடன் வாங்கி தான் நிலத்த சுத்தம் பண்ணி நெல் பயிரிட தேவையான எல்லா வேளைகள்லயும் ஈடுபட்டு இருக்காரு. இந்த சூழல்ல முத்துலெட்சுமி அவரோட கழுத்துல கத்திய வெச்சிருந்தாலும் அது என்னவோ அசோகன்னோட கழுத்துல கத்திய வெச்ச மாதிரி தான் அவருக்கு தோன்றி இருக்கு.

தனக்கு விவசாயம் தவிர வேற எந்த தொழிலும் தெரியாதுனு சொல்லக்கூடிய அசோகன் அவருடைய வாழ்வதாரத்திற்கு அதிகாரிங்க தான் வழிசெய்யனும்னு வெள்ளந்தியா வேண்டுகோள் வெச்சிருக்காரு.

பத்து மாசம் மகன்ன கருவறையில சுமந்து பெத்த தாய் இப்ப அவர்ர குடும்பத்தோட வாழ வழிவிடுவாரா ? பிரிந்து சென்ற குடும்பம் மீண்டும் ஒன்றிணையுமா ? என்றதுக்கு முத்துலெட்சிமியும், காலமும் தான் பதில் சொல்லனும்.


Next Story

மேலும் செய்திகள்