

தஞ்சாவூரில் அரசு ஊழியரான வனிதா என்பவர் உள்ளிட்ட இருவர் வீடுபுகுந்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வனிதா என்ற பெண் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். அவரது வீடு புகுந்த கும்பல் ஒன்று பிள்ளைகளின் கண்முன்னே வனிதாவை வெட்டிக் கொலை செய்தது. அங்கிருந்த மற்றொருவரான கனகராஜ் என்பவரையும் வெட்டிச் சாய்த்து சென்றுள்ளது. தகவல் அறிந்து வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். கொலையான வனிதாவின் சித்தி மகன் பிரகாஷ் தாம் கொடுத்த பணத்தை கேட்டு ஏற்கனவே கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.