மருமகனை அடித்தே கொன்ற மாமியார்.. உண்மையை உடைத்த ரிப்போர்ட்-நாமக்கல்லை நடுங்கவிட்ட சம்பவம்
கணவர் கொலை - மனைவி, மாமனார், மாமியார் உட்பட 5 பேர் கைது
நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே கணவனை அடித்து கொலை செய்த வழக்கில் மனைவி, மாமனார், மாமியார் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். கோட்டணம்பாளையத்தில் மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்த கார்த்திக் என்பவர், ஜூலை 29 ஆம் தேதி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்த நிலையில், அடித்து கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. மதுவுக்கு அடிமையான கார்த்திக் மற்றும் அவரது மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.. இது குறித்து கேட்க குடும்பத்துடன் சென்ற மாமனாரை, கார்த்திக் தாக்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கார்த்திக்கை தாக்கியதால் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது.
Next Story
