காதலி மீது தாய் காவல் நிலையத்தில் புகார் - மாணவர் தற்கொலை
காதலி மீது தாய் காவல் நிலையத்தில் புகார் - மாணவர் தற்கொலை
சென்னையில் காதலி மீது காவல் நிலையத்தில் தாய் புகார் அளித்ததால் மன உளைச்சலில் கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராமாபுரம் பூத்தமேடு பகுதியை சேர்ந்த ராஜா என்பவர், தனியார் கல்லூரியில் படித்து வந்த நிலையில் பெண் ஒருவரை காதலித்து வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராஜாவின் தாய், காதலி மற்றும் அவரது தாயார் மீது ராமாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜா, தனது தாயுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்தபோது மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story