தண்டவாளத்தில் தவறி விழுந்து தாய் உயிரிழப்பு
சிதம்பரம் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தவறி விழுந்த தாய்,
மகன் கண் முன்னே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த ராணி சென்னையில் உள்ள தனது மகன் கார்த்திகேயனுடன் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில், சொந்த ஊருக்கு திரும்பிய இருவரும் சிதம்பரம் ரயில் நிலையத்தில் இறங்க தாமதமானதாக தெரிகிறது. மகன் வேகமாக இறங்கியதை தொடர்ந்து தாய் ராணி இறங்கும்போது, கால் தவறி தண்டவாளத்தில் விழுந்ததில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
