இறந்த மகனின் உடலை பார்த்து காலை பிடித்து கதறி அழுத தாய்

x

திருப்பத்தூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் உள்ள கிணற்றில் இருந்து மாணவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர் விடுதியில் தங்கி படித்து வந்த 11ஆம் வகுப்பு மாணவன் முகிலன், கடந்த ஒன்றாம் தேதி காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில், பள்ளியில் பூட்டப்பட்டிருந்த கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக முகிலன் உடல் எடுத்து செல்லப்பட்டபோது, அவனது தாய் காலை பிடித்து கதறி அழுத சம்பவம் மனதை நொறுக்கியது.

முகிலனுக்கு கை, தலையில் காயம் இருப்பதால், அடித்து கொன்றிருப்பார்களோ என முகிலனின் தாயார் நளினி சந்தேகம் தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவரின் இறப்பில் மர்மம் இருப்பதால், பள்ளியின் பாதிரியார் ஜேசு மாணிக்கத்தை கைது செய்யக்கோரி முகிலனின் உறவினர்கள் மற்றும் அதிமுக, தவெக கட்சி பிரமுகர்களும் வாணியம்பாடி பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து திருப்பத்தூர் நகர காவல்நிலையத்தை முற்றுகையிட்டதோடு, காவல் கண்காணிப்பாளரின் வாகனத்தை முகிலனின் உறவினர்கள் சிறைப்பிடித்தனர்.

மேலும், பள்ளி நிர்வாகத்தினரை கைது செய்யக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி சியாமளா தேவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்