சாலை விபத்தில் உயிரிழந்த மாணவனின் ரிசல்ட்டை பார்த்து கதறி அழுத தாய்
"மகன் உயிரோடு இருந்தால் கலெக்டர் ஆகியிருப்பான்"
ராமநாதபுரம் மாவட்டம் அரியக்குடி கிராமத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த மாணவர் முகேஷ், 12ஆம் வகுப்பில் 483 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். மகனின் மதிப்பெண்ணை அறிந்த தாய், பள்ளி சான்றிதழ்களை பார்த்து கதறி அழுதார். தனது மகன் உயிரோடு இருந்திருந்தால் மேற்படிப்பு முடித்து கலெக்டர் ஆகியிருப்பான் என முகேஷின் தந்தை வேதனை தெரிவித்தார்.
Next Story