குழந்தையை தீ வைத்து கொன்று தாய் தற்கொலை
பெரம்பலூர் அருகே கணவர் இறந்த துக்கத்தில் 8 மாத குழந்தையை தீ வைத்துக் கொன்று, தாயும் தற்கொலை செய்து கொண்டார். தெரணி கிராமத்தை சேர்ந்த நீலகண்டன், பனைமரத்திலிருந்து கீழே விழுந்ததில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆதரவின்றி தவித்த அவரது மனைவி கவிதா, தனது 8 மாத ஆண் குழந்தையை தீ வைத்துக் கொலை செய்ததுடன், தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
Next Story

