தாயும், மகனும் மாத்திரை சாப்பிட்டு தற்கொலை

x

பழனியில் தாயும், மகனும் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி, சௌமி நாராயணத் தெருவை சேர்ந்த விஜயா என்பவர், தனது கணவர் உயிரிழந்த நிலையில், தனது 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், இவரின் 2 மகன்களுக்கும் மனநலம் சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறது. இதில், மூத்த மகன் காப்பகத்தில் உள்ளார். மகன்களின் எதிர்காலம் குறித்த மன உளைச்சலில் இருந்த விஜயா, வீட்டில் தனது 2 வது மகனுடன் இணைந்து அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்