பெண்ணின் படத்தை மார்பிங் செய்து இணையத்தில் பதிவேற்றம் - கைதான நபருக்கு நீதிமன்றம் காட்டிய அதிரடி

x

பெண்ணின் படத்தை மார்பிங் செய்து இணையத்தில் பதிவேற்றம்

கைதான நபருக்கு நீதிமன்றம் காட்டிய அதிரடி

#morphed #women #photos #chennaihc #thanthitv

பெண்ணின் படத்தை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த இளைஞருக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பெண்ணின் படத்தை மார்பிங் செய்து சமூகவலைதளத்தில் வெளியிட்டதாக தென்காசியை சேர்ந்த காஜா முகமது என்பவரை போலீசார் கைது செய்தனர். 2 மாதங்களாக அவர் சிறையில் இருந்து வரும் நிலையில், ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. பெண்ணின் படத்தை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த குற்றம் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், பெண்ணின் ஒழுக்கத்தையும் அவரது குடும்பத்தையும் கடுமையாக பாதிக்கும் என்பதை காரணம் காட்டி, நீதிமன்றம் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது


Next Story

மேலும் செய்திகள்