காலை திருமணம்.. மதியம் வெளிவந்த மணமகளின் சுயரூபம் - மணமகனுக்கு பேரிடி

x

சென்னை திரு.வி.க.நகரில், காலையில் திருமணம் நடந்த பெண், மதியம் காதலனுடன் ஓட்டம் பிடித்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரம்பூரை சேர்ந்த அர்ச்சனா என்பவருக்கும், மாதவரத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கும் பெசன்ட் நகர் சர்ச்சில் திருமணம் நடந்துள்ளது. பின்னர், பெண் வீட்டுக்கு மணமக்கள் சென்ற நிலையில், மாலையில் வரவேற்பு நிகழ்ச்சிக்காக பியூட்டி பார்லர் செல்வதாக‌க் கூறி மணமகள் அர்ச்சனா சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் மணப்பெண் வராத‌தால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், அர்ச்சனாவின் நண்பர்களிடம் விசாரித்தனர். அப்போது, திருமணத்தில் விருப்ப‌ம் இல்லாத‌தால், எருக்கஞ்சேரியை சேர்ந்த காதலன் கலையரசனுடன் சென்றது தெரிய வந்த‌து. இதையடுத்து மாலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட நிலையில், மணமகன் விஜயகுமார் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அடுத்த நாள் காலை காவல்நிலையம் வந்த அர்ச்சனா, திருமணம் செய்த விஜயகுமாரிடம் மன்னிப்பு கேட்டார். திருமண செலவு குறித்து உரிய இழப்பீடு வழங்குவதாக பெண் வீட்டார் தெரிவித்த‌தை அடுத்து, இருதரப்பினரும் கலைந்து சென்றனர்


Next Story

மேலும் செய்திகள்