ஒரே நாளில் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் | திருச்செந்தூரில் அலைமோதும் பக்தர்கள்

x

ஒரே நாளில் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள்

திருச்செந்தூரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்...

குடமுழுக்கு சமீபத்தில் கோலாகலமாக நடந்தேறிய நிலையில், விடுமுறை நாளை ஒட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கூடுதல் விவரங்களை செய்தியாளர் பவானி வழங்க கேட்கலாம்..

கோவில் யானை தெய்வானை பக்தர்களுக்கு தனது துதிக்கையில் ஆசிர்வாதம் செய்தது. பக்தர்கள் நேர்ச்சையாக அங்கப்பிரதட்சணம் செய்தனர்.

மேலும் குழந்தை பாக்கியம் வேண்டி குழந்தை வரம் கிடைத்த பக்தர்கள் கரும்பு கட்டில் தொட்டில் கட்டி கோவிலை வலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

அதேபோல் இன்று ஆனி மாதத்தின் கடைசி முகூர்த்த தினம் என்பதால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தது.

கோவில் முன்புள்ள சண்முகவிலாச மண்டபத்தில் திருமணங்கள் அனைத்தும் நடந்தது. இதில் மணமகன் மற்றும் மணமகளின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கோவிலுக்குள் சென்று திருமணத்தில் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோவிலுக்குள் சென்று முருகனை தரிசனம் செய்தனர்.

கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களின் வசதிக்காக குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்