ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் - களைகட்டிய திருச்செந்தூர் முருகன் கோவில்
வைகாசி மாத கடைசி முகூர்த்த நாளையொட்டி திருசெந்தூர் முருகன் கோவிலில் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. இதனால் கோவில் வளாகத்தில் புதுமணத்தம்பதிகள் மற்றும் உறவினர்களின் கூட்டம் அலைமோதியது.. மேலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோவிலில் தரிசனம் செய்தனர்.. இதனால் கட்டண தரிசனம், பொது தரிசன வரிசை என அனைத்திலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
Next Story
