Moon | உலகில் இதுவரை எந்த நாடும் தெரிந்துகொள்ளாத நிலவின் மர்மம் - கண்டுபிடித்தது நமது சந்திராயன்-2
உலகிலேயே முதன்முறையாக, சூரியனில் இருந்து வெளியாகும் அயனியாக்கப்பட்ட துகள்கள், நிலவின் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை சந்திராயன் 2 விண்கலம் கண்டறிந்துள்ளது. இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திராயன் 2 விண்கலத்தின் ஆர்பிட்டர் சந்திரனை சுற்றியபடி ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த மே மாதம் 10ம் தேதி சூரியனில் இருந்து அயனியாக்கப்பட்ட துகள்கள் வெளியேறியது. இந்த துகள்கள் நிலாவின் வளிமண்டல மேலடுக்கில் அழுத்தத்தை அதிகரிக்கிறது என்பதை சந்திராயன் 2 ஆர்பிட்டர் கண்டுபிடித்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு, நிலவில் ஏற்படும் கால நிலை மாற்றத்தை அறிய உதவும் என கூறப்படுகிறது.
Next Story
