Theni | Vaigai| 8மாதங்களுக்குப் பின் ஆர்ப்பரிக்கும் மூல வைகை| விவசாயிகள் குரலுக்கு செவிமடுத்த இயற்கை

8மாதங்களுக்குப் பின் ஆர்ப்பரிக்கும் மூல வைகை| விவசாயிகள் குரலுக்கு செவிமடுத்த இயற்கை

Theni | Vaigai River | 8 மாதங்களுக்குப் பின் ஆர்ப்பரிக்கும் மூல வைகை | விவசாயிகள் குரலுக்கு செவிமடுத்த இயற்கை

#theni #vaigairiver #vaigai #thanthitv

8 மாதங்களுக்குப் பின் மூல வைகையில் நீர்வரத்து - விவசாயிகள் மகிழ்ச்சி தேனி மாவட்டம் வருசநாடு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால், வைகை ஆற்றின் பிறப்பிடமான மூல வைகையில் 8 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக வறண்டு கிடந்த ஆற்றில் தண்ணீர் வரத் தொடங்கியதால், வாலிபாறை, தும்மக்குண்டு, முறுக்கோடை, சிங்கராஜபுரம், வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் நிலவி வந்த குடிநீர் தட்டுப்பாடு நீங்கியுள்ளது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, கண்டமனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இதுவரை ஆற்றுத் தண்ணீர் வந்து சேராததால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அடுத்தடுத்த பகுதிகளுக்கும் விரைவில் தண்ணீர் வந்து சேரும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் காத்திருக்கின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com