எல்லை மீறிய கந்துவட்டி அரக்கர்கள் - ஒன்றரை வயது குழந்தையோடு லாட்ஜில் அடைத்து டார்ச்சர்

x

Tiruvallur | எல்லை மீறிய கந்துவட்டி அரக்கர்கள் - ஒன்றரை வயது குழந்தையோடு லாட்ஜில் அடைத்து டார்ச்சர்

கந்துவட்டி கொடுமை - குழந்தையுடன் தம்பதியை லாட்ஜில் அடைத்து மிரட்டல்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் குழந்தையுடன் தம்பதியை லாட்ஜில் அடைத்து கொலை மிரட்டல் விடுத்த கந்துவட்டிக்காரர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருத்தணி சாய்பாபா நகரை சேர்ந்த பிரித்விராஜ் வர்மா, பாஸ்கர் என்பவரிடம் இருந்து கந்துவட்டிக்கு 50 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். இதற்காக தினமும் 600 ரூபாய் வட்டி செலுத்திவந்த நிலையில், சமீப நாட்களாக வட்டி செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால், பிரித்விராஜ் வர்மா, அவரது மனைவி மற்றும் ஒன்றரை வயது மகனை பாஸ்கர், லாட்ஜில் அடைத்து கொடுமைப்படுத்தினார். புகாரின்பேரில், பாஸ்கர், தமிழ்வாணன் ,தீபக் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்