Theni | Tree | கொடூர ஆட்டம் காட்டிய பேய் மழை - வேரோடு சாய்ந்த பிரமாண்ட மரம்
#Theni #Tree #HeavyRain #ThanthiTV
Theni | Tree | கொடூர ஆட்டம் காட்டிய பேய் மழை - வேரோடு சாய்ந்த பிரமாண்ட மரம் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே இடி, மின்னலுடன் பெய்த கனமழையால், நூறு ஆண்டுகளுக்கும் பழமையான புளியமரம் ஒன்று வேரோடு சாய்ந்து வீட்டின் மீது விழுந்தது. பழையகோட்டை ஊராட்சிக்குட்பட்ட சிவலிங்கம்பட்டி கிராமத்தில் நேற்று இரவு பலத்த சூறாவளிக் காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. அப்போது, காற்றின் வேகத்தைத் தாங்க முடியாமல் பிரம்மாண்ட புளியமரம் வேரோடு சாய்ந்து அருகிலிருந்த குடியிருப்பு வீட்டின் மீது விழுந்தது. இந்த விபத்தில் வீட்டின் சுவர் மற்றும் கழிப்பறை இடிந்து பலத்த சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக, அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
