கேமராவை பார்த்ததும் குரங்காருக்கு வந்த வெறி.. சர்வநாசம்..வைரலாகும் CCTV

x

கிருஷ்ணகிரி அருகே வீட்டில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவை குரங்கு சேதப்படுத்தும் காட்சி தற்பொழுது வைரலாகி வருகிறது.

கிருஷ்ணகிரி அடுத்த சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தேவசமுத்திரம் பகுதியில் கடந்த சில தினங்களாகவே 50க்கும் மேற்பட்ட குரங்குகள் முகாமிட்டு, வீடுகளில் உள்ள பொருட்கள் மற்றும் தென்னை மரங்கள் உள்ளிட்டவற்றை நாசம் செய்து வருகின்றன. இந்நிலையில் அந்தப் பகுதியில் உள்ள தியாகு என்பவரின் வீட்டுக்கு சென்ற குரங்கு ஒன்று, அங்கிருந்த சிசிடிவி கேமராவை பார்த்து, அதற்குண்டான பாணியில் சேதப்படுத்தும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது. இந்த காட்சியை முதலில் பார்த்த அவரது குடும்பத்தினர் பேய் என நினைத்து பயந்ததாக தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்