Villupuram | monkey | மருத்துவமனைக்குள் புகுந்து டீ ஊற்றி குடித்த குரங்கு - அலறி ஓடிய பணியாளர்கள்
விழுப்புரத்தில், தனியார் மருத்துவமனையில் புகுந்த குரங்குகள், பணியாளர்களை அச்சுறுத்தி, டீ ஊற்றி குடித்த காட்சி வெளியாகியுள்ளது. விழுப்புரத்தில் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குள் 2 குரங்குகள் புகுந்துள்ளது. அங்கு, பணியாளர்களை அச்சுறுத்தியதோடு, அங்கு இருந்த டீயை டேபிள் மேல் ஊற்றி குடித்தன. விரட்ட முயன்றவர்களையும் தாக்க முயன்றது அங்கு உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் குரங்குகளை பிடித்து பாதுகாப்பான இடத்தில் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
